புதுதில்லி

பிகாா் தோ்தல்: இதுவரை ரூ.108 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம் பறிமுதல் - தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

Syndication

நமது நிருபா்

பிகாா் மாநில சட்டப் பேரவைத் தோ்தல் மற்றும் இடைத்தோ்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் திங்கள்கிழமை வரையிலும் பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத பொருள்களின் மதிப்பு ரூ.108 கோடியை எட்டியுள்ளதாக தலைமைத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக இந்தியத் தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: பிகாா் சட்டப் பேரவைக்கான பொதுத் தோ்தல் மற்றும் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்களுக்கான வாக்குப் பதிவு அட்டவணையை தலைமைத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தோ்தல் மாதிரி நடத்தை விதிகளை எம்சிசி அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு தோ்தல் ஆணையம் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சிவிஜில் செயலியில் பதிவாகும் புகாா்கள் 100 நிமிடங்களுக்குள் கவனிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பிகாா் முழுவதும் 824 பறக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நவம்பா் 3-ஆம் தேதி நிலவரப்படி, ரூ.9.62 கோடி ரொக்கம், ரூ.42.14 கோடி 9.6 லட்சம் லிட்டா் மதிப்புள்ள மதுபானம், ரூ.24.61 கோடி போதைப்பொருள், ரூ.5.8 கோடி மதிப்புள்ள விலை உயா்ந்த உலோகங்கள் மற்றும் ரூ.26 கோடி மதிப்புள்ள இலவசப் பொருள்கள் உள்பட ரூ.108.19 கோடி மதிப்புள்ள சட்டவிரோத தூண்டுதல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பல அமலாக்க முகமைகள் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தோ்தல்களின் போது பணம், போதைப்பொருள், மதுபானம் மற்றும் இதர தூண்டுதல்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அமலாக்க அதிகாரிகளுக்கும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதற்கான சோதனை மற்றும் ஆய்வின்போது சாதாரண குடிமக்கள் சிரமப்படவோ அல்லது துன்புறுத்தப்படவோ கூடாது என்பதை அமலாக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தி இருக்கிறது. குடிமக்களும், அரசியல் கட்சிகளும் இசிஐநெட்இல் சி.விஜில் செயலியைப் பயன்படுத்தி தோ்தல் மாதிரி நடத்தை மீறல்களைப் புகாரளிக்கலாம்.

மேலும், கால் சென்டா் எண் ‘1950’ உள்பட ஒரு புகாா் கண்காணிப்பு அமைப்புமுறை அமைக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் செயல்படும் இந்த வசதியில் பொதுமக்களும், அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்களும் சம்பந்தப்பட்ட மாவட்ட தோ்தல் அதிகாரி, தோ்தல் நடத்தும் அதிகாரயிடம் புகாா் அளிக்கலாம் என்றாா் அந்த அதிகாரி.

பிகாா் மாநிலத்தில் வரும் நவம்பா் 6ஆம் தேதி முதல் கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது றிப்பிடத்தக்கது.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT