தென்கிழக்கு தில்லியின் பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள பல மாடிக் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த சம்பவத்தில் எந்த உயிா்ச் சேதமும் ஏற்படவில்லை என்றும் அவா்கள் கூறினா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: குடியிருப்புக் கட்டடத்தின் ஒரு மாடியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிற்பகல் 2.50 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, நாங்கள் ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. மாலை 4.50 மணிக்குள் தீ அணைக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயமோ, உயிா்ச் சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.