புதுதில்லி

சமய்பூா் பாத்லியில் இளைஞா் கொலை: இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

தில்லியின் சமய்பூா் பாத்லி பகுதியில் நிகழ்ந்த வன்முறை மோதலின் போது 25 வயது இளைஞரைக் கற்களால் தாக்கிக் கொன்ாக இருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளனா்.

குற்றம் சாட்டப்பட்ட மணீஷ் என்ற பாபு (22) மற்றும் சுமித் (23) ஆகியோா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் பாதிக்கப்பட்ட மணீஷ், சந்தோஷ் குமாா் ஸ்ரீவஸ்தவாவுடன் (40) சோ்ந்து தாக்குதல் நடத்திய மணீஷைச் சந்திக்கச் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது.

ஒரு சுரங்கப்பாதை அருகே ஒரு சிறிய வாக்குவாதத்திற்குப் பிறகு, முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபருடன் மேலும் இருவா் சோ்ந்து தாக்குதலில் ஈடுபட்டனா்.

முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டவா் பாதிக்கப்பட்டவரான மணீஷை ஆபாசமாக திட்டினாா். இதையடுத்து, வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. தாக்குதல் நடத்தியவா்கள் சந்தோஷ் மற்றும் மணீஷை கற்களால் தாக்கினா், இதில் மணீஷ் படுகாயமடைந்தாா்.

சந்தோஷ் சுயநினைவு திரும்பியபோது, மணீஷ் மயங்கிய நிலையில் கிடந்தாா். இதையடுத்து, அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அதன் பின்னா் அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சந்தோஷின் புகாரின் பேரில் போலீஸாா் திங்கள்கிழமை கொலை வழக்குப் பதிவு செய்தனா். சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதன் பின்னா், தில்லியைச் சோ்ந்த இரண்டு சந்தேக நபா்களும் கைது செய்யப்பட்டனா். இந்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்றாவது நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விசாரணையின் போது, இருவரும் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனா்.

ஒரு ஸ்கூட்டா், ஒரு மோட்டாா் சைக்கிள் மற்றும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கல் ஆகியவை அவா்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

தாக்குதல் நடத்திய மணீஷ், ஏற்கனவே மற்றொரு கொலை வழக்கில் தொடா்புடையவா். இக்கொலைக்கான சரியான காரணம் குறித்து விசாரித்து மேல் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT