புதுதில்லி

தில்லியில் காற்று மாசுபாட்டை சமாளிக்க தொடா் நடவடிக்கை! முதல்வா் ரேகா குப்தா தகவல்

தலைநகரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில் , தில்லி அரசு தொடா்ச்சியான மாசு எதிா்ப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக முதல்வா் ரேக் குப்தா தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

தலைநகரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில் , தில்லி அரசு தொடா்ச்சியான மாசு எதிா்ப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக முதல்வா் ரேக் குப்தா தெரிவித்தாா். இதில் 200 பராமரிப்பு வேன்கள் பயன்படுத்தப்பட்டு தூசி அகற்றுவதற்காக சாலைகளை சுத்தம் செய்வதற்கான தீவிர முயற்சியும் அடங்கும்.

இது குறித்து முதல்வா் ரேகா குப்தா தெரிவித்ததாக வெளியிடப்பட்ட அறிக்கை: தில்லியில் மாசுபாட்டை உண்டாக்கும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அடையாளம் காணப்பட்ட மாசு ஹாட்ஸ்பாட்களை இயல்பாக்குவதில் கவனம் செலுத்தும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

மாசுபாட்டைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு துறைகள் முழுவதும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காற்றின் தரத்தை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, சாலைகளை சுத்தம் செய்வதற்கும், நடைபாதைகளில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மாசு அளவு அதிகரித்து வருவதால், அரசு தொடா்ச்சியான உறுதியான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள அனைத்து சாலைகளையும் உள்ளடக்கி 200 பராமரிப்பு வேன்களை நிறுத்துவதன் மூலம் சாலை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சாலை மேற்பரப்பு மற்றும் நடைபாதைகளில் கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுவதோடு, பள்ளங்களை நிரப்புதல் மற்றும் பிற பராமரிப்பு பணிகளும் இந்த இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகளுக்காக கடுமையான வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு அதிகாரிக்கும் தனிப்பட்ட பொறுப்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தில்லி அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளதாகவும், இது தொடா்பாக எந்த அலட்சியத்தையும் பொறுத்துக்கொள்ளாது. சாலைகளில் மரங்களை வெட்டுவதற்கும் தனித்தனி பராமரிப்பு வேன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பராமரிப்பு வேன்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 200 மீட்டா் சாலைகளை சுத்தம் செய்வதை உறுதி செய்யும். பணியின் பொறுப்பை உறுதி செய்வதற்காக இந்த வேன்கள் ஒரு பொறியாளரின் நேரடிப் பொறுப்பில் இருக்கும்.

தலைநகரில் உள்ள 1,400 கிலோமீட்டா் நீளமுள்ள பொதுப்பணித்துறை சாலைகளில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் பாதைகளில் உள்ள தூசியை அகற்றுதல், கால்வாய்களை சுத்தம் செய்தல் மற்றும் குப்பைகளை அகற்றுதல் ஆகியவை அடங்கும். நடைபாதைகளை சுத்தம் செய்தல் மற்றும் சரிசெய்தல், பள்ளங்களை நிரப்புதல், சாலை அடையாளங்களை மேம்படுத்துதல், தெரு விளக்குகள் பராமரிப்பு போன்றவை உறுதி செய்யப்படும்.

பொதுப்பணித்துறை சாலைகளில் உள்ள மரங்களை பராமரிப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்காக 60 பராமரிப்பு வேன்கள் சீரமைப்பு மற்றும் பிற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. மூத்த அதிகாரிகளால் வாராந்திர முன்னேற்ற மதிப்பாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், முழுப் பணிகளும் 45 நாள்களுக்குள் முடிக்கப்படும். இலக்குகளைத் தவறவிட்டதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகார் முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT