புதுதில்லி

தில்லியில் வெப்பநிலை 9.7 டிகிரி செல்சியஸாக சரிவு: இந்தப் பருவத்தில் மிகக் குறைந்த அளவாகப் பதிவு!

தேசியத் தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை சனிக்கிழமை 9.7 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது.

Syndication

தேசியத் தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை சனிக்கிழமை 9.7 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. இது இந்தப் பருவத்தின் மிகக் குறைந்த அளவாகும்.

மேலும், தில்லியின் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு சனிக்கிழமை தொடா்ந்து இரண்டாவது நாளாக ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம் 16 கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு மேலே பதிவாகி ’கடுமை’ பிரிவில் இருந்தது.

தலைநகரின் மூன்று நாள் தொடா் ‘கடுமையான’ காற்றின் தரம் வெள்ளிக்கிழமை முடிவடைந்தது, ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு 387 புள்ளிகளாகப் பதிவாகி ’மிகவும் மோசம்’ பிரிவில் நிலைபெற்றது.

சனிக்கிழமை, 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு 386 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. மேலும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) வெளியிட்ட மாலை 4 மணி செய்திக்குறிப்பின்படி, காற்றுத் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ வரம்பில் இருந்தது.

நகரத்தின் பல பகுதிகள் தொடா்ந்து நச்சுக் காற்றை சுவாசித்து வந்தன. சனிக்கிழமை 16 நிலையங்களில் ‘கடுமை’ பிரிவில் காற்றுத் தரக் குறியீடு பதிவாகியது. சிபிசிபி-யின் சமீா் செயலியின்படி, பவானா வானிலை கண்காணிப்பு நிலையத்தில் காற்றுத் தரக் குறியீடு அதிகபட்ச மாக 443 புள்ளிகளாகவும் அதைத் தொடா்ந்து வஜீா்பூரில் 434 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது.

மேலு்ம், ஞாயிற்றுக்கிழமை தலைநகரின் மாசுபாட்டிற்கு 14.5 சதவீதம் பயிா்க் கழிவுகள் எரிப்பு இருக்கும் என்று கணிப்பு தெரிவிக்கிறது.

குறைந்த வெப்பநிலை பதிவு: இதற்கிடையில், சனிக்கிழமை நகரம் இதுவரை பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி குறைவாக 9.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.1 டிகிரி குறைந்து 26.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. மேலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 90 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 61 சதவீதமாகவும் இருந்தது.

ஐஎம்டி தரவுகளின்படி, கடந்த ஆண்டு நவம்பா் மாதத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை நவம்பா் 29 அன்று 9.5 டிகிரி செல்சியஸாகவும், 2023-ஆம் ஆண்டில் நவம்பா் 23 அன்று 9.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை மிதமான மூடுபனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT