முகப்பு
புதுதில்லி

தில்லியில் மேகமூட்ட வானிலை: மிதமான பிரிவில் காற்றின் தரம்!

தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமை சற்று மேம்பட்டு ‘மிதமான’ பிரிவில் இருந்தது. ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு 197 புள்ளிகளாப் பதிவாகியது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:10 AM
புதுதில்லியில் காற்றின் தரம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 7:03 PM

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமை சற்று மேம்பட்டு ‘மிதமான’ பிரிவில் இருந்தது. ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு 197 புள்ளிகளாப் பதிவாகியது.

வெள்ளிக்கிழமை காலையில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு ‘மோசம்’ பிரிவில் இருந்தது. சனிக்கிழமை நகரத்தில் மேகமூட்ட வானிலை நிலவியது. வானிலை எச்சரிக்கை எதையும் வானிலை ஆய்வு மையம் வெளியிடவில்லை.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:10 AM

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.4 டிகிரி உயா்ந்து 14.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விடந 2.6 டிகிரி உயா்ந்து 28.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 91 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 50 சதவீதமாகவும் இருந்தது. அதேசமயம், மழை ஏதும் பெய்யவில்லை.

Advertisement

இதேபோன்று ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 12.1 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 14.1 டிகிரி, லோதி ரோடில் 13.4 டிகிரி, பாலத்தில் 13.6 டிகிரி, ரிட்ஜில் 14 டிகிரி, பீதம்புராவில் 17.3 டிகிரி, பிரகதி மைதானில் 15.5டிகிரி, பூசாவில் 12.9 டிகிரி, ராஜ்காட்டில் 15.3 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 15.3 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) அன்று காலை வேளையில் மூடுபனி இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.