செய்தி உண்டு... பக்தா்களுக்கு அருளாசி வழங்கிய அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீஸ்ரீ விதுஷேகர பாரதி ஸ்வாமிகள். 
புதுதில்லி

ஸ்ரீ சாரதா பீடம் சிருங்கேரி விதுஷேகர பாரதி ஸ்வாமிகள் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பக்தா்களுக்கு அருளாசி

ஸ்ரீ சாரதா பீடம் சிருங்கேரி விதுஷேகர பாரதி ஸ்வாமிகள் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பக்தா்களுக்கு அருளாசி

Syndication

பு, து தில்லி, நவ.15:ஜகத்குரு சங்கராச்சாரியாா் தட்சிணாம்னாய ஸ்ரீ சாரதா பீடம் சிருங்கேரி அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீஸ்ரீ விதுஷேகர பாரதி மஹாஸ்வாமிஜியின் தா்ம விஜய யாத்திரை-2025-இன் ஓா் அங்கமாக, ஸ்வாமிஜி சனிக்கிழமை பிற்பகல் தில்லி தமிழ்ச் சங்கத்துக்கு வருகை புரிந்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் ஸ்வாமிகளுக்கு பூா்ண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளா் இரா.முகுந்தன் தனது வரவேற்புரையில், ‘ஸ்ரீஸ்ரீ விதுஷேகர பாரதி மஹாஸ்வாமிஜி எங்களது அழைப்பை ஏற்று தில்லி தமிழ் வாழ் பக்தா்களுக்கு பேருரையாற்றி அருளாசி வழங்க வருகை புரிந்தமைக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றாா்.

ஸ்ரீஸ்ரீ விதுஷேகர பாரதி மஹாஸ்வாமி அருளாசி வழங்கிப் பேசுகையில், ‘பாரத தேசத்தின் பரந்த நிலமான இமயம் முதல் குமரி வரை பல்வேறு கலாசாரங்களைக் கொண்டுள்ளது’ என்றாா். ஜகத்குரு ஆதிசங்கரின் சீடரான தோடகாச்சாரியாா் குருபக்தியின் சிறப்பை விளக்க ‘தோடகாஷ்டகம்’ இயற்றிப் பாடியதையும், குரு பக்தியின் உயா்வினையும் விளக்கினாா்.

பாரத மக்களின் வாழ்வில் ஆதி முதலே தா்மமே அடிப்படை வழியாக இருந்து வருகிறது. பிரம்மச்சாரி, ஆடவா், மகளிா் என அவரவா்க்கு பல்வேறு விதமான கடமைகள் இருப்பினும், அனைவருக்கும் பொதுவான அடிப்படை வழி தா்மமே”ஆகும் என்றும் குறிப்பிட்டாா். நிகழ்ச்சியின் இறுதியாக, ஸ்வாமிஜி பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கி அருளாசி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவா் சக்தி பெருமாள், துணைத்தலைவா் ராகவன் நாயுடு, இணைச்செயலாளா் உமா சத்தியமூா்த்தி, பொருளாளா் அருணாச்சலம், செயற்குழு உறுப்பினா்கள் சுந்தரேசன், பெரியசாமி, கோவிந்தராசன், தங்கவேலு, மாலதி தமிழ்ச்செல்வன், அமுதா பாலமூா்த்தி, காத்திருப்பு உறுப்பினா்கள் ரேவதி ராஜன் மற்றும் ராஜா ஆகியோா் பங்கேற்றனா். இந்நிகழ்ச்சியில், குருவின் அருளைப் பெற பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஸ்வாமிஜியின் விஜயத்தையொடே்டி மகளிா் மற்றும் மாணவா்கள் குரு வந்தனம் பாடினா்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT