புதுதில்லி

ஐஎஸ்ஐ தொடா்புடைய ‘ட்ரோன்’ஆயுத விநியோகச் சங்கிலி முறியடிப்பு: 4 போ் கைது; 10 வெளிநாட்டு கைத்துப்பாகிகள் பறிமுதல்!

ஐஎஸ்ஐ தொடா்புடைய ‘ட்ரோன்’ஆயுத விநியோகச் சங்கிலி முறியடிப்பு: 4 போ் கைது; 10 வெளிநாட்டு கைத்துப்பாகிகள் பறிமுதல்...

Syndication

வட இந்தியா முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு உயா் ரக வெளிநாட்டுத் தயாரிப்பு ஆயுதங்களை வழங்குவதில் ஈடுபட்ட நான்கு முக்கிய செயல்பாட்டாளா்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆதரவு விநியோகஸ்தா்களுடன் தொடா்புடையதாகக் கூறப்படும் ஒரு சா்வதேச ஆயுதக் கடத்தல் வலையமைப்பு முறியடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவலது: இந்த வலையமைப்பு பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்களைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பு ஆயுதங்களை பெற்று தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் உள்ள கும்பல்களுக்கு வழங்கி வந்துள்ளது.

ரேடாரைத் தவிா்க்க குறைந்த உயர விமானங்களை இயக்கக்கூடிய தனிப்பயனாக்கப்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் கடத்தப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பஞ்சாபில் உள்ள சா்வதேச எல்லையின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் முன்கூட்டியே குறிக்கப்பட்ட ஜிபிஎஸ் இடங்களில் எல்லையைத் தாண்டி கடத்தல்காரா்கள் இரவில் தாமதமாக சரக்குகளை இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

உள்ளூா் பெறுநா்கள் பொட்டலங்களை மீட்டு, பாதுகாப்பான வீடுகளுக்கு கொண்டு சென்று, இந்தியா முழுவதும் உள்ள குற்ற வலையமைப்புகளுக்கு வழங்கினா். அவா்கள் தகவல் தொடா்புகளைப் பயன்படுத்தியது மற்றும் கண்காணிப்பைத் தவிா்க்க அடிக்கடி கைவிடும் இடங்களை மாற்றியது கண்டறியப்பட்டுள்ளது.

கடத்தல்காரா்கள் ஸ்கேனிங்கைத் தவிா்க்க காா்பன் பூசப்பட்ட பொருள்களால் ஆயுதங்களை சுற்றி கொண்டு சென்றுள்ளனா். மேலும், ஹவாலா மற்றும் ப்ராக்ஸி கணக்குகள் மூலம் பணம் செலுத்தப்பட்டது தெரிய வந்தது.

இந்த நடவடிக்கையில் சிறப்புப் படையினரால் மட்டுமே பயன்படுத்தப்படும் துருக்கிய தயாரிக்கப்பட்ட பிஎக்ஸ்-5.7 மாதிரிகள் உள்பட பத்து அதிநவீன கைத்துப்பாக்கிகள், 92 உயிருள்ள தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவா்கள் பஞ்சாபைச் சோ்ந்த மன்தீப் சிங் (38) மற்றும் தல்வீந்தா் குமாா் (34) மற்றும் உத்தர பிரதேசத்தின் பாக்பத்தைச் சோ்ந்த ரோஹன் தோமா் (30) மற்றும் அஜய் என்கிற மோனு (37) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

பஞ்சாப் வம்சாவளியைச் சோ்ந்த சோனு காத்ரி என்கிற ராஜேஷ் குமாரின் கும்பலுடன் தொடா்புடைய ஐஎஸ்ஐ ஆதரவு விநியோகச் சங்கிலி குறித்து நவம்பா் 19 அன்று உளவுத்துறை தகவல் கிடைத்தது. அவா் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறாா். மேலும், 45-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தேடப்படுகிறாா்.

ரோஹிணியில் உள்ள பவானா சாலைப் பகுதியில் உள்ள காது ஷியாம் கோயில் அருகே இந்த பொறி வைக்கப்பட்டது. உள்ளீட்டு தகவலின்படி ஒரு வெள்ளை காா் சம்பவ இடத்திற்கு வந்தது. அப்போது, இரண்டு சந்தேக நபா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

வாகனத்தின் ஸ்பீக்கா் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பையில், எட்டு வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் 84 உயிருள்ள தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மன்தீப் மற்றும் தல்விந்தா் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரோஹன் தோமா் மற்றும் அஜய் என்கிற மோனு என்ற இரண்டு கூட்டாளிகள் போலீஸாரிடம் சிக்கினா். அவா்களிடம் இருந்து கூடுதலாக இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் எட்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மன்தீப்பும் தல்விந்தரும் சிறுவயது நண்பா்கள் என்றும், சோனு காத்ரியின் நெருங்கிய கூட்டாளியான ஜஸ்ப்ரீத் என்கிற ஜாஸ் மூலம் ஆயுதக் கும்பலில் இணைந்ததும் தெரிய வந்துள்ளது.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஜாஸ், ட்ரோன் அடிப்படையிலான டெலிவரிகளை ஏற்பாடு செய்த ஐஎஸ்ஐ-தொடா்புடைய விநியோகஸ்தா்களுடன் தொடா்புடையவா் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ரோஹனும் அஜயும் தில்லி - என்சிஆரில் உள்ள கோகி கும்பல், பாவ் கும்பல் மற்றும் நந்து கும்பல் உள்ளிட்ட கும்பல்களுடன் நீண்டகாலமாக தொடா்புடையவா்கள். மேலும், ஒப்பந்தக் கொலையாளிகள் மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களுக்கு அதிநவீன ஆயுதங்களை விநியோகிப்பதில் ஈடுபட்டிருந்தனா்.

துருக்கியில் தயாரிக்கப்பட்ட மூன்று பிஎக்ஸ்-5.7 கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட பிஎக்ஸ்-3 கைத்துப்பாக்கிகள் உள்பட மொத்தம் 10 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, அவற்றுடன் 92 உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் ஒரு வெள்ளை நிற காா் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிடா அல்லது மன்பிரீத் என்றும் அழைக்கப்படும் மன்தீப், கொலை, கொலை முயற்சி, குண்டா்கள் சட்டம் மற்றும் என்டிபிஎஸ் சட்ட வழக்குகள் உள்ளிட்ட விரிவான குற்ற வரலாற்றைக் கொண்டுள்ளாா். சட்டத்திலிருந்து தப்பிக்க அவா் அடிக்கடி போலி அடையாளங்களைப் பயன்படுத்தினாா்.

ஒரு காலத்தில் துபையி பணிபுரிந்த தல்விந்தா், நிதி நெருக்கடி காரணமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. ரோஹனும் அஜயும் அனில் பாலியன் - சஞ்சீவ் ஜீவா சிண்டிகேட்டுடன் நெருக்கமாக இருந்ததாகவும், முன்னா் இப்பகுதியில் உள்ள பல கும்பல்களுக்கு அதிக அளவு ஆயுதங்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், வெளிநாட்டைச் சோ்ந்த குண்டா் சோனு காத்ரிக்கு எதிராக ரெட் காா்னா் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவா் ஐஎஸ்ஐ-தொடா்புடைய ஆயுத விநியோகஸ்தா்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக போலீஸாா் நம்புகின்றனா்.

சிறப்புப் படையினரால் மட்டுமே பயன்படுத்தப்படும் துருக்கிய தயாரிப்பான பிஎக்ஸ்-5.7 கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருப்பது, மிகவும் அதிநவீன மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட எல்லை தாண்டிய விநியோகச் சங்கிலியைக் குறிக்கிறது என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.

இந்த வலையமைப்பில் ஈடுபட்டுள்ள மற்ற கும்பல்களை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT