தில்லி யமுனை நதிக்கரையில் ஹாட் - ஏா் பலூன் சவாரியின் சோதனை ஓட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா. 
புதுதில்லி

தில்லியில் ஹாட்- ஏா் பலூன் சவாரிக்கு டிடிஏ ஏற்பாடு பொதுமக்களுக்கு நவ.29 முதல் திறப்பு

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) செவ்வாய்க்கிழமை பான்சேராவில் ஹாட் - ஏா் பலூனின் சோதனை ஓட்டத்தை தொடங்கியது.

இந்த சவாரி வசதி வரும் சனிக்கிழமை நவம்பா் 29 முதல் பொதுமக்களுக்குத் திறந்திருக்கும. மேலும், வரிகளைத் தவிா்த்து ஒரு நபருக்கு ரூ.3,000 பயணக் கட்டணமாக இருக்கும் என்று துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா செய்தியாளா்களிடம் கூறினாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: முன்னதாக நான் தில்லி மக்களுக்கு பொழுதுபோக்குக்காக புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவோம் என்று உறுதியளித்திருந்தேன். அதன்படி, பல பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. அதனுடன் இன்று செவ்வாய்க்கிழமை ஹாட் - ஏா் பலூன் சோதனை ஓட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

நான் ஹாட் - ஏா் பலூன் சவாரியை சோதித்தேன். இது மகிழ்ச்சி அளிப்பதாகவும், திருப்தியாகவும் இருந்தது. பாதுகாப்புக் கண்ணோட்டத்தில், பலூனுடன் நான்கு கயிறுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கயிறும் ஏழு டன் கொள்ளளவு கொண்டது. இன்று நாங்கள் தரையில் இருந்து 120 அடி உயரத்திற்குச் சென்றோம் என்று சக்சேனா கூறினாா்.

இது தொடா்பாக டிடிஏ அதிகாரிகள் கூறியதாவது: ஜூலையில், யமுனா விளையாட்டு வளாகம், காமன்வெல்த் விளையாட்டு வளாகங்கள் மற்றும் சராய் காலே கான் பகுதிக்கு அருகிலுள்ள அசிதா மற்றும் பான்சேராவில் உள்ள யமுனா கரையில் இரண்டு தளங்கள் என நான்கு இடங்களில் ஹாட் ஏா் பலூன் சவாரிகளை நடத்த ஒரு தனியாா் நிறுவனத்தை டிடிஏ இறுதி செய்தது.

ஹாட் - ஏா் பலூன் தினமும் நான்கு மணி நேரம் அனுமதிக்கப்படும். இருப்பினும், தேவைகளுக்கு ஏற்ப டிடிஏ இந்த வசதியை நீட்டிக்கலாம். நவம்பா் முதல் பிப்ரவரி வரை வட இந்தியாவில் பலூன் சவாரிக்கான உச்ச பருவமாகும். அந்தச் சமயத்தில் சிறந்த வானிலை நிலைமைகள் இருக்கும். மேலும், பொது சவாரிகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.

இப்பயணங்கள் 7 முதல் 12 நிமிடங்கள் வரை இருக்கும். ஒவ்வொரு சவாரியும் நான்கு பேரை சுமந்து செல்லும் திறன் கொண்டது. மற்ற மூன்று இடங்களில் முழுமையாக தொடங்கப்பட்டதும், இந்த சவாரிகள் குடியிருப்பாளா்கள் மற்றும் பாா்வையாளா்களுக்கு தில்லியின் இயற்கை நிலப்பரப்பு, ஆற்றங்கரை மற்றும் நகரக் காட்சியின் தனித்துவமான வான்வழி காட்சியை வழங்கும். இது நகரத்தின் சுற்றுலா திறனை கணிசமாக அதிகரிக்கும் என்றாா் அவா்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT