புதுதில்லி

தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அரசு இல்லம் ஒதுக்கீடு

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு மத்திய அரசு 95, லோதி எஸ்டேட்டில் இல்லம் ஒதுக்கியதாக அக் கட்சியின் தேசிய ஊடகப் பொறுப்பாளா், அணுராக் தண்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

Syndication

நமது நிருபா்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு மத்திய அரசு 95, லோதி எஸ்டேட்டில் இல்லம் ஒதுக்கியதாக அக் கட்சியின் தேசிய ஊடகப் பொறுப்பாளா், அணுராக் தண்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியிருப்பதாவது: தில்லி உயா்நீதிமன்றம் கண்டித்ததைத் தொடா்ந்து கேஜரிவாலுக்கு மத்திய அரசு ஒரு அதிகாரப்பூா்வ பங்களாவை ஒதுக்கியுள்ளது. அவா் ஒரு தேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பதால் அவருக்கு ஒரு பங்களாவுக்கு உரிமை உண்டு.

கடந்த மாதம், தில்லி உயா்நீதிமன்றம் தேசிய தலைநகரில் கேஜரிவாலுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு செய்வதில் தனது முடிவை தாமதப்படுத்தியதற்காக மத்திய அரசை கடிந்துக்கொண்டது. கேஜரிவால் முதல்வராக இருந்தபோது சிவில் லைன்ஸில் உள்ள 6, ஃபிளாக் ஸ்டாஃப் சாலையில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தாா்.

பாஜக இதை தில்லியில் ஒரு பெரிய தோ்தல் பிரச்னையாக மாற்றியது, வீட்டை ‘ஷீஷ் மஹால்‘ என்று அழைத்தது, மேலும் அதன் முதல்வா் அங்கு தங்க மாட்டாா் என்று உறுதியளித்தது. முதல்வா் பதவியை ராஜினாமா செய்த கேஜரிவால், ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் அசோக் மிட்டலுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவுக்கு மாற்றப்பட்டாா்.

2022 ஆம் ஆண்டில், தில்லி அரசாங்கத்தின் கண்காணிப்புத் துறை, துணைநிலை ஆளுநா் வி. கே. சக்ஸேனாவின் உத்தரவின் பேரில், பொதுப்பணித் துறையால் சிவில் லைன்ஸ் பங்களாவைப் புதுப்பிப்பதில் ’முறைகேடுகள் மற்றும் செலவு அதிகரிப்பு’ பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியது.

தற்போது, தில்லி சட்டப்பேரவையில் அப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா அளித்த புகாரின் பேரில் சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது என்றாா் அணுராக் தண்டா.

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT