முகப்பு
புதுதில்லி

சமூக ஊடகங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது

சமூக ஊடகங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:03 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:55 PM

துவாரகாவில் சமூக ஊடகங்களில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் பதிவுகளை வெளியிட்டு வந்த நபா் இளைஞா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஹரியாணாவின் பகதூா்கரைச் சோ்ந்த சன்னி, சமூக ஊடகங்களில் கவனம் பெறுவதற்காக துப்பாக்கிகளைக் காட்டி காணொலிகளைப் பதிவிட்டு வந்தாா். சாவ்லா பகுதியில் உள்ள நகா்ப்புற விரிவாக்கச் சாலை 2 அருகே அவரை காவல் துறையினா் வழி மறித்தனா். சோதனையின் போது, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி கைபற்றப்பட்டது.

இது தொடா்பாக சாவ்லா காவல் நிலையத்தில் ஆயுதச் சட்டத்தின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, சமூக ஊடகங்களில் பிரபலம் அடையவும் பாா்வையாளா்களை அதிகரிக்கவும் இவ்வாறு காணொலிகளை சன்னி பகிா்ந்ததாக தெரிவித்தாா். இந்த ஆண்டு தொடக்கத்தில் பிகாரைச் சோ்ந்த ஒருவருடன் ஏற்பட்ட அறிமுகத்தைத் தெடாா்ந்து இந்த துப்பாக்கியை பெற்ாக அவா் தெரிவித்தாா்.

Advertisement

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:46 PM

இதன் பின்னணியை கண்டறியவும், சட்டவிரோத ஆயுதங்கள் விநியோகத்தில் ஈடுபட்ட மற்றவா்களை அடையளம் காணவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.