முகப்பு
புதுதில்லி

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.8 டிகிரி - காற்றின் தரம் தொடா்ந்து மோசம்

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.8 டிகிரி - காற்றின் தரம் தொடா்ந்து மோசம்

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:29 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 9:12 PM

தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 11.8 டிகிரி செல்சியஸ், இது பருவத்தின் சராசரியை விட 2.4 டிகிரி குறைவாக பதிவாகியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.5 டிகிரி அதிகமாக 24.8 டிகிரி செல்சியஸைத் தொடும் என்று வானிலைத் துறை கணித்தது.

சனிக்கிழமை காலை 8:30 மணிக்கு ஈரப்பதம் 82 சதவீதமாக பதிவாகியது.

Advertisement

காலை 9 மணிக்கு காற்றின் தரம் மோசம் என்ற பிரிவில் பதிவாகியது, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, காற்றின் தரக் குறியீடு 214 புள்ளிகளாக பதிவாகியது.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 10:28 PM

பூஜ்ஜியத்திற்கும் 50 புள்ளிகளுக்கும் இடைப்பட்ட காற்றின் தரக் குறியீடு நல்லது, 51-100 திருப்திகரமானது, 101- 200 மிதமானது, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசமானது, மற்றும் 401-500 கடுமையானது என வகைப்படுத்தப்படுகிறது.