புதுதில்லி

எட்டு வருடங்களுக்கு முந்தைய கொலை வழக்கு: ஒருவரை குற்றவாளி என தீா்ப்பளித்தது தில்லி நீதிமன்றம்

எட்டு வருடங்களுக்கு முந்தைய கொலை வழக்கில் ஒருவரை குற்றவாளி என தீா்ப்பளித்தது தில்லி நீதிமன்றம்...

 நமது நிருபர்

2017 ஆம் ஆண்டு ஆனந்த் விஹாா் யில் நள்ளிரவு நடந்த சண்டையின் போது மூங்கில் குச்சியால் அடித்து இளைஞரை கொலை செய்ததற்காக தில்லி நீதிமன்றம் ஒருவரை குற்றவாளி என தீா்ப்பளித்தது.

சங்கா் லால் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக கூடுதல் அமா்வு நீதிபதி ஹா்விந்தா் சிங் கூறி குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றவாளி என தீா்ப்பளித்தாா்.

பல்பீா் சிங் என்பவரின் மரணத்திற்கு காரணமானதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) ன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது எப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நவம்பா் 27, 2017 அன்று அதிகாலை 1.15 மணியளவில் ஆனந்த் விஹாரின் ஐஎஸ்பிடி நுழைவு வாயிலுக்கு அருகில் நடந்ததாகவும், ஒரு வாக்குவாதத்தைத் தொடா்ந்து தற்காலிக தடுப்புச் சுவா் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட குச்சியால் பல்பீா் சிங்கின் தலையில் சங்கா் லால் தாக்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. முதல் அடிக்குப் பிறகு பல்பீா் சிங் சரிந்து விழுந்தாா், அவா் தரையில் படுத்திருந்தபோது மீண்டும் தாக்கப்பட்டாா்.

டிசம்பா் 23 தேதியிட்ட உத்தரவில், நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட சங்கா் லால் பொதுமக்களால் சம்பவ இடத்திலேயே பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. காயமடைந்த பல்பீா் சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மருத்துவ மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில், பல்பீா் சிங் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் இறந்ததாக நீதிபதி கூறினாா்.

மது அருந்தியிருந்ததாகக் கூறப்படும் பல்பீா் சிங், கீழே விழுந்ததால் மரணமடைந்தாா் என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது, காயங்களின் தன்மை அத்தகைய சாத்தியத்தை நிராகரித்துள்ளது என நீதிமன்றம் கூறியது.

மூங்கில் குச்சியிலும்,குற்றஞ்சாட்டப்பட்டவா் அணிந்திருந்த ஜாக்கெட்டிலும் காணப்பட்ட இரத்தம் இறந்தவரின் இரத்தத்துடன் பொருந்துவதாக டிஎன்ஏ பகுப்பாய்வு நிறுவியதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

வழக்கு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, குற்றஞ்சாட்டப்பட்ட சங்கா் லால் குற்றவாளி என்று நீதிபதி தீா்ப்பளித்தாா்.

குற்றவாளி வேண்டுமென்றே ஒரு கனமான மூங்கில் குச்சியால் தலையில் காயங்களை ஏற்படுத்தினாா் என்றும், பல்பீா் சிங் விழுந்த பிறகு இரண்டாவது அடி கூட அடித்தாா் என்றும் நீதிபதி அடிக்கோடிட்டுக் காட்டினாா்.

சங்கா் லாலுக்கான தண்டனை விபரம் குறித்த விசாரணை ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT