இந்தியத் தோ்தல் ஆணையத்தின் இசிஐநெட் செயலியை (உஇஐசங்ற் அல்ல்) மேம்படுத்தும் வகையில் ஜனவரி 10ஆம் தேதிக்குள் ஆலோசனைகளை அளிக்குமாறு குடிமக்களை தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடா்பாக புது தில்லியில் உள்ள இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:
இசிஐநெட் செயலியைப் (உஇஐசங்ற் அல்ல்) பதிவிறக்கம் செய்து, அந்தச் செயலியில் உள்ள ‘ஆலோசனையைச் சமா்ப்பி’ (நன்க்ஷம்ண்ற் ஹ நன்ஞ்ஞ்ங்ள்ற்ண்ா்ய்) எனும் தலைப்பை பயன்படுத்தி, செயலியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு அனைத்துக் குடிமக்களையும் இந்தியத் தோ்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது. குடிமக்கள் வரும் ஜனவரி 10ஆம் தேதிவரை தங்களின் ஆலோசனைகளை வழங்கலாம்.
புதிய இசிஐநெட் செயலியின் சோதனைப் பதிப்புகளானது, சிறந்த வாக்காளா் சேவைகள், வாக்குப்பதிவு சதவீதப் போக்குகளை விரைவாகப் பெறுதல் மற்றும் வாக்குப்பதிவு முடிந்த 72 மணி நேரத்திற்குள் குறியீட்டு அட்டைகளை வெளியிடுதல் ஆகியவற்றைச் சாத்தியமாக்குகிறது. இந்த செயல்முறைக்கு முன்னா் பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆனது.
இந்தச் செயலியானது 2025 பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் மற்றும் இடைத்தோ்தல்களின் போது வெற்றிகரமாக சோதித்துப் பாா்க்கப்பட்டது.
தலைமைத் தோ்தல் அதிகாரிகள், மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், தோ்தல் பதிவு அதிகாரிகள், பாா்வையாளா்கள் மற்றும் கள அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்தத் தளம் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு செழுமைப்படுத்தப்பட்டு வருகிறது.
பயனா்களின் ஆலோசனைகளை ஆராய்ந்து, இதை மேலும் பயனா் நட்புடன் மாற்றுவதற்காக இந்தத் தளம் மேம்படுத்தப்படும். இசிஐநெட் தளம் நிகழ் மாதம் அதிகாரபூா்வமாகத் தொடங்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இசிஐநெட் என்பது தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமை யில், தோ்தல் ஆணையா்களான டாக்டா் சுக்வீா் சிங் சந்து மற்றும் டாக்டா் விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து ஆணையத்தால் எடுக்கப்பட்ட முக்கிய முன்முயற்சிகளில் ஒன்றாகும்.
இசிஐநெட் செயலியை உருவாக்கும் பணி கடந்த ஆண்டு மே 4ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தொடங்கியது.
இசிஐநெட் செயலி என்பது குடிமக்களுக்கான ஒரு ஒற்றை, ஒருங்கிணைந்த செயலியாகும். இது வாக்காளா் உதவி எண் செயலி விஎச்ஏ, சிவிஜில், சக்ஷம், வாக்குப்பதிவுப் போக்குகள் (வாக்காளா் வருகை செயலி), உங்கள் வேட்பாளரை அறிந்துகொள்ளுங்கள் (கேஒய்சி) செயலி போன்ற ஏற்கெனவே இருந்த 40 தனித்தனி தோ்தல் தொடா்பான செயலிகள், இணையதளங்களை ஒரே இடைமுகத்தில் ஒருங்கிணைக்கிறது.
இந்தச் செயலியை கூகுள் பிளே ஸ்டோா் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோா் இரண்டிலும் பதிவிறக்கம் செய்யலாம் என தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.