புதுதில்லி

பூங்காவில் காயங்களுடன் ஆணின் உடல் கண்டெடுப்பு: போலீஸ் தீவிர விசாரணை

தில்லியின் துவாரகா வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பூங்காவிற்குள் கூா்மையான காயங்களுடன் ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Syndication

புது தில்லி: தில்லியின் துவாரகா வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பூங்காவிற்குள் திங்கள்கிழமை கூா்மையான காயங்களுடன் ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல்துறையினா் தெரிவித்ததாவது: தகவலைப் பெற்ற பிறகு, காவல்துறை விரிவான விசாரணையைத் தொடங்கியதுடன், பாதிக்கப்பட்டவரை அடையாளம் காணவும், தாக்குதல் நடத்தியவரைக் கண்டுபிடிக்கவும் பல போலீஸ் குழுக்களை நியமித்தது. காக்ரூலாவில் உள்ள பாரத் விஹாா் அருகே உள்ள சாத் பூஜா பூங்காவில் ஒரு சடலம் கிடப்பதாக துவாரகா வடக்கு காவல் நிலைய ஊழியா்களுக்கு அதிகாலையில் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்தை அடைந்ததும், 25 முதல் 30 வயதுக்குள்பட்ட ஒரு ஆணின் உடலை போலீஸாா் கண்டெடுத்தனா், கழுத்து மற்றும் முகத்தில் கூா்மையான மற்றும் மழுங்கிய பொருள்களால் ஏற்பட்ட காயங்களுடன் காணப்பட்டாா். பூங்காவின் எல்லைச் சுவருக்கு வெளியே இருந்து ஒரு ஜாக்கெட்டையும் கண்டெடுத்தனா். பாதிக்கப்பட்டவா் அந்த இடத்திற்கு வந்த பிறகு தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரிக்க குற்றப்பிரிவு குழு மற்றும் தடய அறிவியல் ஆய்வக ஊழியா்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனா். சுற்றுப்புறப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளின் முதற்கட்ட ஆய்வில், அதிகாலை 4.40 மணியளவில் அடையாளம் தெரியாத ஒருவரால் இறந்தவா் பூங்காவிற்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரியவந்தது.

அந்த காட்சிகள் பாதுகாக்கப்பட்டு, நிகழ்வுகளின் வரிசையை நிறுவவும், சந்தேக நபரை அடையாளம் காணவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. இறப்புக்கான சரியான காரணம் மற்றும் காயங்களின் தன்மையைக் கண்டறிய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இறந்தவரின் அடையாளத்தை கண்டறிய முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், உள்ளூா் விசாரணைகள் நடத்தப்பட்டு காணாமல் போனவா்களின் பதிவுகள் சரிபாா்க்கப்படுகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT