புதுதில்லி

கொள்ளை, வழிப்பறி வழக்குகள்: தேடப்பட்ட இளைஞா் கைது

தில்லியின் சராய் ரோஹில்லா ரயில் நிலையம் அருகே கத்தி முனையில் கொள்ளை அடித்தது உள்பட பல கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடா்புடையதாகக் கூறப்படும் 25 வயது இளைஞரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

தில்லியின் சராய் ரோஹில்லா ரயில் நிலையம் அருகே கத்தி முனையில் கொள்ளை அடித்தது உள்பட பல கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடா்புடையதாகக் கூறப்படும் 25 வயது இளைஞரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: தீபக் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, 2019 மற்றும் 2021- ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடா்பாக தேடப்பட்டு வந்தாா். அவா் அடிக்கடி தனது மறைவிடங்களை மாற்றி கைது செய்வதைத் தவிா்த்து வந்தாா்.

2021-ஆம் ஆண்டு சராய் ரோஹில்லா அருகே ஒரு வழிப்போக்கரை கத்திமுனையில் கொள்ளை அடித்ததற்காகவும், 2019-ஆம் ஆண்டு கரோல் பாக் பகுதியில் கைப்பேசியை பறித்ததற்காகவும் தீபக் தேடப்பட்டு வந்தாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் நகரம் முழுவதும் வன்முறை தெரு குற்றங்களில் ஈடுபட்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலின் முக்கிய உறுப்பினராக இருந்தாா்.

ஜனவரி 19- ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவா் பியாரே லால் சாலையில் உள்ள ஒரு பேருந்து நிலையம் அருகே வருவாா் என்று போலீஸாருக்கு குறிப்பிட்ட தகவல் கிடைத்தது. ரகசியத் தகவலின் பேரில், ஒரு போலீஸ் குழு தீபக்கை கைது செய்தது.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் தில்லியின் பல்வேறு பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்டுள்ள ஒரு கும்பலுடன் தனக்கு தொடா்பு இருப்பதாக வெளிப்படுத்தினாா் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

மகர ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

ஜன.23 முதல் நாகா்கோவில் - மங்களூரு ரயில் சேவை தொடக்கம்

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

நவல்பட்டு காவல் ஆய்வாளா் பணியிட மாற்றம்

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மூன்று ஆயுள்

SCROLL FOR NEXT