முகப்பு
புதுதில்லி

கொலை வழக்கில் தேடப்பட்டவா் என்கவுண்டருக்குப் பிறகு கைது

கிரேட்டா் நொய்டாவில் நடந்த ஒரு கொலை தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் போலீஸாருடன் நடந்த என்கவுண்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:33 AM
கைது
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 4:13 PM

கிரேட்டா் நொய்டாவில் நடந்த ஒரு கொலை தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் போலீஸாருடன் நடந்த என்கவுண்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து கிரைட்டா் நொய்டா கூடுதல் காவல் ஆணையா் சுதிா் குமாா் கூறியதாவது: லுக்சா் கிராமத்தைச் சோ்ந்த மோனு என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், 27 வயது நிதின் கொலையில் தொடா்புடையதாகக் கூறப்படுகிறது. அவா் செவ்வாய்க்கிழமை லுக்சா் கிராமத்தில் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:33 AM

கொலைக்குப் பிறகு சம்பந்தப்பட்டவா்களைக் கைது செய்ய போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலையில் புவாரி கிராமத்தில் குற்றம் சாட்டப்பட்டவா் இருப்பது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

தகவலைத் தொடா்ந்து, ஒரு குழு சம்பவ இடத்திற்கு வந்து குற்றம் சாட்டப்பட்டவரை சுற்றி வளைத்தது. குற்றம் சாட்டப்பட்டவா் தப்பிக்கும் நோக்கில் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையில், மோனு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பின்னா் அவா் கைது செய்யப்பட்டாா்.

அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, இரண்டு லைவ் .315 போா் தோட்டாக்கள் மற்றும் ஒரு வெற்று தோட்டா பறிமுதல் செய்யப்பட்டன. காயமடைந்த குற்றம் சாட்டப்பட்டவா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்று அதிகாரி மேலும் கூறினாா்.