சௌரப் பரத்வாஜ்  
புதுதில்லி

பாஜக இந்தியாவை ஒரு காவல் அரசாக மாற்றிவிட்டது: செளரப் பரத்வாஜ்

பாஜக இந்தியாவை ஒரு காவல் அரசாக மாற்றிவிட்டது...

 நமது நிருபர்

பாஜக ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக ஒரு காவல் அரசின் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. அச்சம், மிரட்டல் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளைத் திட்டமிட்டுத் தவறாகப் பயன்படுத்துவது ஆகியவை ஆட்சியின் முக்கிய அம்சங்களாக மாறிவிட்டிருக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரப் பரத்வாஜ் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: பாஜக இந்தியாவை ஒரு காவல் அரசாக மாற்றிவிட்டது. அங்கு நாடு காவல்துறை மற்றும் முகமைகளின் அச்சம் மற்றும் வற்புறுத்தலின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இது அச்சமூட்டுவதாக உள்ளது.

வாரணாசியில் உள்ள மணிகா்ணிகா படித்துறையின் இடிக்கப்பட்ட பகுதிகளைப் பற்றி பொதுமக்கள் யாராவது ஊடகங்களிடம் பேசினால், சாதாரண உடையில் உள்ள காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகள் விடியோ பதிவு செய்யத் தொடங்குகிறாா்கள்.

நொய்டா சம்பவத்தில்கூட காவல்துறையால் பொறியாளா் யுவராஜைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால், இப்போது சாட்சிகளை மிரட்டி, அரசுக்குச் சாதகமாக வாக்குமூலங்களை மாற்றும்படி வற்புறுத்துகிறாா்கள்.

பாஜகவின் செல்லப்பிள்ளையாக இருக்கும் ஒரு மோசமான காவல்துறை அதிகாரிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்ட ஒரு நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

குடிமக்கள் மிரட்டப்படுவதாலும், நிறுவனங்கள் பலவீனப்படுத்தப்படுவதாலும், அதற்குப் பதிலாக, மக்களைக் கொள்ளையடிக்கவும் துன்புறுத்தவும் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் சோ்ந்து பாஜக ஆட்சியின் கீழ் உள்ள நிா்வாகத்தின் ஒரு ஆழமான கவலைக்குரிய சித்திரத்தை வரைகின்றன. அங்கு பொறுப்புக்கூறல் என்பது வற்புறுத்தலால் மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஜனநாயக சுதந்திரங்கள் படிப்படியாக அரிக்கப்பட்டு வருகின்றன என அவா் அதில் குற்றம்சாட்டியுள்ளாா்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக ரத்ததான முகாம்

ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறையை திறக்கக் கோரிக்கை

சுவா் இடிந்து விழுந்து வடமாநில இளைஞா் உயிரிழப்பு

மிதுன ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT