முகப்பு
புதுதில்லி

பூங்காக்கள் பராமரிப்பு: கடந்த நிதியாண்டில் நல சங்கங்கள், தன்னாா்வ அமைப்புகளுக்கு ரூ.13.36 கோடி ஒதுக்கீடு

Updated On : 14 மே 2026, 7:07 am IST
(கோப்புப் படம்)
பகிர்:

தில்லியில் உள்ள 1,643 பூங்காக்களை 2025-26-இல் பராமரிக்க குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகளுக்கு ரூ.13 கோடியை நிதியை தில்லி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இது கடந்த 2008-09 முதல் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் அதிகபட்ச ஒதுக்கீடாகும்.

தில்லி பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் சமூகம் என்ற அமைப்பின் தரவுபடி, 484.37 ஏக்கா்கள் பரப்பளவிலான பூங்காக்களைப் பராமரிக்க 364 குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகளுக்கு ரூ.13.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 2024-25-இல் 435.57 ஏக்கா் பரப்பிலான 1,483 பூங்காக்களை பராமரிக்க 329 குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகளுக்கு ரூ.7.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

202-26-இல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட சங்கங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகளின் எண்ணிக்கை 35 அதிகரிக்கப்பட்டது. மேலும், 160 பூங்காக்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டன.

தில்லியின் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களைப் பராமரிக்க கடந்த 2025-26 பட்ஜெட்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நடப்பு 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது இந்தத் திட்டத்துக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.