திருநெல்வேலி

குற்றாலம் சித்திரசபையில் சிதைவுறும் ஓவியங்கள்

தென்காசி, அக். 21:     குற்றாலம் சித்திரசபையில் அழியாப் புகழ்பெற்ற மூலிகை ஓவியங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.   இவற்றைச் சீரமைக்க முடியாமல் கோயில் நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.   குற்றாலம்

பா.​ பிரகாஷ்

தென்காசி, அக். 21:     குற்றாலம் சித்திரசபையில் அழியாப் புகழ்பெற்ற மூலிகை ஓவியங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

  இவற்றைச் சீரமைக்க முடியாமல் கோயில் நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.

  குற்றாலம் குற்றாலநாதர் கோயிலுக்கு வடபகுதியில் அமைந்துள்ளது சித்திரசபை. இது சிவனின் திரிபுர தாண்டவம் நடைபெற்ற இடமாகக் கருதப்படுகிறது.

  தமிழகத்திலுள்ள ஐந்து சபைகளுள் குற்றாலத்தில் உள்ள சித்திரசபை மட்டுமே பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் வகையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இறைவன் ஓவிய வடிவில் காட்சியளிக்கிறான்.

  கிபி 16-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இச்சபை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  சித்திர சபை பராக்கிரம பாண்டியனால் தொடங்கப்பட்டு உதயமார்த்தாண்டவர்மனால் கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

  இக்கோயிலின் அமைப்பு பிரமிடு வடிவம் கொண்டதாகும்.

   கோயிலின் மேற்கூரை தாமிர தகடுகளால் அமைக்கப்பட்டுள்ளது.

  பிரமிடு அமைப்பின் நிழலும், தாமிர தகடுகளின் மணமும் மனதிற்கு அமைதியை தரும் வகையில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.

  சித்திரசபையில் வைணவ கோயில் சைவ கோயிலாக மாற்றப்பட்டது, இறைவனின் திருமணக் காட்சி, கஜேந்திர மோட்சம் ஆகிய தல வரலாற்றுச் செய்திகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன.

  இங்குள்ள ஓவியங்கள் மூலிகைகளால் வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

   இந்த ஓவியங்கள் வரையப்பட்டு சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

  இதுபோன்ற ஓவியங்கள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளன.

  கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றபோது, பராமரிப்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால் ஓவியங்கள் புதுப்பிக்கப்படவில்லை.

  தற்போது இந்த ஓவியங்கள் முழுவதும் சேதமைடந்தும், அழிந்தும் காணப்படுகின்றன.

  இக்கோயிலில் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த 07-02-2003 அன்று பாலாலாயம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இக்கோயிலில் நடைபெறும் தேரோட்டம் மற்றும் தெப்ப உற்சவ திருவிழா அனைத்தும் நிறுத்தப்பட்டது.

  ஆறு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் எந்த பணிகளும் இங்கு தொடங்கப்படவில்லை என்பது பக்தர்களிடையே மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இங்கு பாலாலயம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து குற்றால நாதர் கோயிலில் உற்சவ மூர்த்திகள் திருத்தேரிலோ, சப்பரத்திலோ அமர்ந்து உலாவருவது ஆகம விதிகளின்படி நிறுத்தப்பட்டுள்ளது.

  எனவே உற்சவ மூர்த்திகள் புறப்பாடு கோயில் உள்பிரகாரத்தில் நடைபெறுகிறது.

  குற்றாலநாதர் கோயிலுக்கு ஆண்டுதோறும் வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது.

  ஆண்டிற்கு சுமாராக ரூ. 2 கோடி வருமானம் வருகிறது. ஆனாலும் சித்திரசபை கோயிலில் பணிகள் மேற்கொள்ளப்படவேயில்லை.

  இதுகுறித்து, இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர் தனபாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

  சித்திரசபையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக இந்து சமய அறநிலையத் துறை, தொல்லியல் துறையினர் அடங்கிய இரண்டு உயர் நிலை கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

  இந்த ஓவியங்களைப் புதுப்பிப்பதற்கு ரூ. 48 லட்சம் ஆகும் என உத்தேச மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

  கரூரை சேர்ந்த தொழிலதிபர் தங்கவேல் இதற்கான முழுத் தொகையையும் செலுத்துவற்கு அரசுக்கு ஒப்புதல் கடிதம் அளித்துள்ளார்.

  தற்போது அமைக்கப்பட்டுள்ள இரண்டு கமிட்டிகளும் ஆய்வு மேற்கொண்டு, இன்னும் ஒருமாதத்தில் பணிகள் துவங்கும்.

  மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஓவியங்களை வரைந்தவர்களை கொண்டே இங்குள்ள ஓவியங்களையும் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

  பணிகள் துவங்கிவிட்டால் ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் பணிகள் முடிவடையும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT