திருநெல்வேலி

வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ​உதவித்தொகை சீராக கிடைக்குமா?

கோவில்பட்டி, ஆக. 17: தமிழக அரசு அறிவித்துள்ள வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை முறையாக கிடைக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற பொதுப் ப

ரா. சர​வ​ண​முத்து

கோவில்பட்டி, ஆக. 17: தமிழக அரசு அறிவித்துள்ள வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை முறையாக கிடைக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற பொதுப் பிரிவினருக்கு உதவித்தொகையாக வழங்கிவருகிறது. அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்களுக்கு ரூ.150, ப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.200 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.300 வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

40 வயதுக்கு குறைந்தவர்களும், குடும்ப வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதே உதவித்தொகை பெறுவதற்கான தகுதியாகும்.

அதனடிப்படையில் உதவித் தொகை முறையாக 3 மாதங்களுக்குகு ஒருமுறை சரியாக வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே பார்வையற்றவர்களுக்கு மட்டும் என வழங்கப்பட்டு வந்ததை தமிழக அரசு 1-1-2010 முதல் மாற்றுத்திறனாளிகள் என்று மாற்றியுள்ளது. இதன்படி பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உதவித்தொகையை பெறமுடியும்.

இத்திட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்குப் பிறகு இந்த உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள். 10 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகையைப் பெறலாம். ஆண்டு வருமானத்திற்கு எந்தவித உச்சவரம்பும் கிடையாது. 40 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

எஸ்.டி., எஸ்.சி. பிரிவினர் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பற்ற, எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் அல்லது பள்ளிக்கே செல்லாதவர்களுக்கு கூட வயது வரம்பை அடிப்படையாகக் கொண்டு, ரூ.200 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பற்ற ப்ளஸ் 2 படித்தவர்களுக்கு ரூ.375 மற்றும் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு ரூ.450-ம் வழங்கப்படுகிறது. பொதுப்பிரிவில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

இத் திட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 14ஆயிரம் பேர் உதவித் தொகையைப் பெற்று வந்தனர்.

தற்போது, இத் திட்டத்தில் சுமார் 8 ஆயிரம் பேர் மட்டுமே பெற தகுதியுடையவர்களாக இருந்து பயனடைந்து வருகின்றனர். ஆனால், வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அறிவிக்கப்பட்ட உதவித்தொகை திட்டம் 1-1-2010-ல் அமலாக்கப்பட்டு, சுமார் 675 பேர் தூத்துக்குடி மாவட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.

ஆனால், இத் திட்டத்தின் உதவித்தொகை முதல் 3 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பின்னர், ஏப்ரல் மாதத்திலிருந்து இத் திட்டத்திற்கான உதவித் தொகை இன்று வரை வழங்கப்படாமல், நிலுவையில் உள்ளது.

எனவே, வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையையும், பொதுப்பிரிவு வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வழங்குவதுபோல காலதாமதமின்றி 3 மாதங்களுக்கு ஒருமுறை முறையாக வழங்க வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பாகும்.

தமிழக அரசு அறிவித்துள்ள இத்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT