திருநெல்வேலி

புதிதாக உருவாகிறது குற்றத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு

திருநெல்வேலி,ஜூன் 10: மத்திய, மாநில போலீஸôரிடம் தகவல்களைப் பரிமாறும் விதமாகவும், தீவிரவாதிகள், சமூக விரோதிகளைக் கண்காணிக்கும் விதமாகவும், தமிழக காவல்துறை புதிதாக திட்டமிட்ட குற்றத் தடுப்பு நுண்ணறிவு ப

கே.வாசுதேவன்

திருநெல்வேலி,ஜூன் 10: மத்திய, மாநில போலீஸôரிடம் தகவல்களைப் பரிமாறும் விதமாகவும், தீவிரவாதிகள், சமூக விரோதிகளைக் கண்காணிக்கும் விதமாகவும், தமிழக காவல்துறை புதிதாக திட்டமிட்ட குற்றத் தடுப்பு நுண்ணறிவு பிரிவை (ர்ழ்ஞ்ஹய்ண்ள்ங்க் ஸ்ரீழ்ண்ம்ங் ண்ய்ற்ங்ப்ப்ண்ஞ்ங்ய்ஸ்ரீங் ன்ய்ண்ற்)  ஒன்றை உருவாக்கி வருகிறது.

 மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, மத்திய, மாநில அரசுகள் உள்நாட்டு பாதுகாப்பில் தனிக் கவனம் எடுத்து செயல்படுகின்றன. குறிப்பாக, தீவிரவாதிகள் மீதான கண்காணிப்பும், நடவடிக்கையும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

 காவல்துறையின் மூளையாக கருதப்படும் உளவுப் பிரிவு போலீஸôருக்கு புத்தூயிர் அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் பரிமாற்றத்ததில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக மும்பை தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுவதால், மத்திய,மாநில உளவுப் பிரிவு போலீஸôரின் தகவல்களை ஒருங்கிணைக்கும் பணியில் காவல்துறை ஈடுப்பட்டுள்ளது.

 இதன் மூலம் தீவிரவாத இயக்கங்கள், தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள், அவர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றைக் துல்லியமாக கண்காணிக்க முடியும் என காவல்துறையினர் கருதுகின்றனர்.

 இதன் ஒரு பகுதியாக, தமிழக காவல்துறை புதிதாக குற்றத் தடுப்பு நுண்ணறிவுத் பிரிவை தொடங்கியுள்ளது. திட்டமிட்ட குற்றத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு என அழைக்கப்படும் இந்த உளவுப் பிரிவுக்கு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸôர் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

  இதற்கு மொத்தம் 300 காவலர்கள், 4 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 20 ஆய்வாளர்கள், சுமார் 50 உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

 எந்தவிதத்திலும் இக் குற்றத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தோல்வியடைந்து விடக் கூடாது என்பதற்காக, தீவிர விசாரணைக்கு பிறகு நேர்மைமிக்க அதிகாரிகளும், காவலர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

 இதில் மண்டல அளவில் துணை காவல் கண்காணிப்பாளர், சரக அளவில் ஒரு ஆய்வாளர், மாவட்ட அளவில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் இந்த குற்றத் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இயங்க உள்ளது.

 மாநில அளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ளவர், இதற்கு தலைமை தாங்கி வழிநடத்துகிறார். போதைப் பொருள்,ஹவாலா பணம்,ரௌடி கும்பல் ஆகியவற்றைக் கண்காணிப்பது, தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இயக்கங்களைக் கண்காணிப்பது, தீவிரவாதிகளை மறைமுகமாக ஆதரிக்கும் வி.ஐ.பி.களை பற்றி தகவல்களை சேகரிப்பது, தீவிரவாதிகளின் பணம் எந்த தொழிலும் முதலீடு செய்யப்படுகின்றனவா என்று புலனாய்வு செய்வது என இந்த பிரிவு போலீஸôரின் பணி நீளுகிறது.

  தற்போது செயல்படும் தனிப்பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸôர் (எஸ்.பி.சி.ஐ.டி), தாங்கள் சேகரிக்கும் தகவல்களை அரசுக்கு அனுப்பி வைக்கின்றனர். பெரிய அளவில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்பட்சத்தில் மட்டும், உள்ளூர் போலீஸôருக்கு தேவையான ஆலோசனைகளையும், அடுத்து எடுக்கப்பட வேண்டி நடவடிக்கை குறித்தும் பரிந்துரை செய்கின்றனர்.

 ஆனால் தனிப்பிரிவு பிரிவு போலீஸôர் பணியில் இருந்து, குற்றத் தடுப்பு நுண்ணறிவு போலீஸôரின் பணி முற்றிலும் மாறுபடுகிறது.

  இவர்கள் தாங்கள் திரட்டும் எந்த தகவல்களையும் அரசுக்கு அனுப்புவது இல்லை. மாறாக அந்த தகவல்கள் தனிப்பிரிவு குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறைத் தலைவருக்கு அனுப்புகின்றனர். அங்கிருந்து நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு, அந்த தகவல்கள் அனுப்பபடுகின்றன.

 அதோடுமட்டுமன்றி இங்கிருந்து திரட்டப்படும் தகவல்களை ரா,சி.பி.ஐ., ஐ.பி. போலீஸôரிடமும் அளிக்கின்றனர். இதேபோல ரா,ஐ.பி.,சி.பி.ஐ. போலீஸôர் தரும் தகவல்களை, இவர்களும் பெற்றுக் கொள்ளுகின்றனர்.

  இதன் காரணமாக மத்திய,மாநில போலீஸôரிடம் தற்போது உள்ளதுபோல தகவல்கள் பரிமாறும் பிரச்னைகள் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 இந்த புதிய நுண்ணறிவு பிரிவால், வழக்குகள் விரைந்து முடிக்கப்படும், மாநிலம் விட்டு மாநிலம் தலைமறைவாகும் குற்றவாளிகளை எளிதில் கண்டறிந்து கைது செய்ய முடியும், மத்திய,மாநில போலீஸôரிடம் தகவல் பரிமாறப்படுவதால் சமூக விரோதிகளையும், தீவிரவாத செயல்களையும் ஓரளவு கட்டுப்படுத்த முடியும், மத,சாதி ரீதியான கலவரங்களை பெரிய அளவில் உருவெடுக்க முடியாமல் தடுக்க முடியும் என காவல்துறையினர் நினைக்கின்றனர்.

 இந்த நுண்ணறிவு பிரிவு தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த பிரிவின் கட்டமைப்பு பணிகளில் 80 சதவிகிதம் நிறைவுபெற்றுள்ளன.

  இன்னும் சில மாதங்களில் திட்மிட்ட குற்றத் தடுப்பு நுண்ணறிவு பிரிவு முழுமையாக செயல்படும் என விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT