செறுகோலில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம்
கருங்கல், ஜன. 8:பள்ளியாடி அருகே உள்ள செறுகோலில் சுங்கான்கடை மானிங்ஸ்டார் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் செறுகோல் ஊர்மக்கள் இணைந்து ஜன. 5- ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாள்கள் நாட்டுநலப் பணித்திட்ட சிறப்பு
திருநெல்வேலிசெறுகோலில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம்
கருங்கல், ஜன. 8:பள்ளியாடி அருகே உள்ள செறுகோலில் சுங்கான்கடை மானிங்ஸ்டார் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் செறுகோல் ஊர்மக்கள் இணைந்து ஜன. 5- ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாள்கள் நாட்டுநலப் பணித்திட்ட சிறப்பு
கருங்கல், ஜன. 8:பள்ளியாடி அருகே உள்ள செறுகோலில் சுங்கான்கடை மானிங்ஸ்டார் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் செறுகோல் ஊர்மக்கள் இணைந்து ஜன. 5- ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாள்கள் நாட்டுநலப் பணித்திட்ட சிறப்பு முகாமை நடத்துகின்றனர்.
முகாமின் தொடக்க நிகழ்ச்சிக்கு செறுகோல் புனித அந்தோனியார் பங்குப்பணியாளர் லியோ அலெக்ஸ் தலைமை வகித்தார்.
மானிங்ஸ்டார் தொழில்நுட்பக் கல்லூரித் தாளாளர் விக்டர் முன்னிலை வகித்தார்.
எம்.பி. ஹெலன்டேவிட்சன் முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினார்.
முகாமில் களப்பணி,மனிதஉரிமை மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு,இலவச கண் மருத்துவ முகாம்,சுகாதார வாழ்க்கைமுறை,ரத்ததான விழிப்புணர்வு முகாம்,வேலைவாய்ப்பு வழிக்காட்டுதல்,ஆளுமை வளர்ச்சி மற்றும் தலைமைப் பண்புகள்,எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகள் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை மானிங்ஸ்டார் கல்லூரி முதல்வர் வின்சென்ட் ஜெயசீலன், உதவித் திட்ட அலுவலர் ஜான்கென்னடி, மோகன்ராஜ், தீகாராமன்ஆகியோர் செய்திருந்தனர்.