மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கலாசாரப் போட்டிகள்
தூத்துக்குடி, ஜன. 8: மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மாவட்ட அளவிலான கலாசாரப் போட்டிகள் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற இப் போட்டிகளை, ஆட்சியர் சி.
தூத்துக்குடி, ஜன. 8: மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மாவட்ட அளவிலான கலாசாரப் போட்டிகள் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற இப் போட்டிகளை, ஆட்சியர் சி.நா. மகேஸ்வரன் தொடங்கி வைத்துப் பேசினார்.
நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் எம்.ஆர். நடராஜன், கல்லூரி முதல்வர் அருள்சகோதரி ரூபா ஆகியோர் பேசினர். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஆ. செல்வம் வரவேற்றார்.
முன்னதாக, 12 வட்டாரங்களிலும் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்கள் இப் போட்டியில் பங்கேற்றனர். கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, குழுபாட்டு, நடனம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
இதில், வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ. 3 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ. 2 ஆயிரமும் வழங்கப்பட்டன.