ஏரோநாட்டிகல் பொறியியல் படிக்க விருப்பம்
தக்கலை, மே 10: பிளஸ் 2 தேர்வில் கன்னியாகுமரி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.எம். ஜோஸ்ரிஜன், ஏரோநாட்டிகல் பொறியியல் கல்வி கற்க விரும்புவதாகத் தெரிவ
தக்கலை, மே 10: பிளஸ் 2 தேர்வில் கன்னியாகுமரி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.எம். ஜோஸ்ரிஜன், ஏரோநாட்டிகல் பொறியியல் கல்வி கற்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
இவர் பாடவாரியாகப் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 195, ஆங்கிலம் 190, இயற்பியல் 198, கணிதம் 198, வேதியியல் 200, கணினியியல் 199. மொத்தம் 1180.
இவருடைய தந்தை எஸ்.பயஸ் மீன் வியாபாரம் செய்து வருகிறார். தாய் மார்சலின், இவருக்கு இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர். இவர்கள் மணலிக்கரையில் வசித்து வருகின்றனர்.
Advertisement
மாணவர் ஜோஸ்ரிஜன் கூறுகையில், மாநில அளவில் முதலிடம் வருவேன் என எதிர்பார்த்தேன்.
பள்ளித் தாளாளர் ராபர்ட் கென்னடி, தலைமை ஆசிரியர் எஸ்.ஜே.பெனர்ஜி மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் எனக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் செய்து தந்ததோடு, ஒவ்வொரு பாடத்திலும் என் மீது தனி கவனம் செலுத்தினர்.
என்னுடைய தந்தை காலை 4 மணி முதல் மாலை வரை மழை, வெயில் பாராமல் வீதி வீதியாகச் சென்று மீன்வியாபாரம் செய்து எங்களைப் படிக்கவைக்கிறார்.
பொறியியல் வல்லுநராக வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஆகையால் ஏரோநாட்டிகல் படிக்க விரும்புகிறேன் என்றார் அவர்.
மாணவர் ஜோஸ்ரிஜன் 10-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.