திருநெல்வேலி

குப்பைகள் தேங்கும் கோவில்பட்டி தினசரி சந்தை

கோவில்பட்டி, நவ. 11:÷குப்பைகள் தேங்கிய நிலையில் கோவில்பட்டி தினசரிச் சந்தை இருந்து வருவதால் சந்தைக்குள் செல்லும் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ÷தூத்துக்குடி மாவட்டத்தி

ரா. சர​வ​ண​முத்து

கோவில்பட்டி, நவ. 11:÷குப்பைகள் தேங்கிய நிலையில் கோவில்பட்டி தினசரிச் சந்தை இருந்து வருவதால் சந்தைக்குள் செல்லும் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

÷தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரம் கோவில்பட்டி. 2-12-2008  முதல் கோவில்பட்டி நகராட்சியின் தரம் சிறப்பு நிலையாக உயர்த்தப்பட்டுள்ளது.

÷கோவில்பட்டி நகராட்சியின் மக்கள் தொகை சுமார் 95ஆயிரம் ஆகும். இங்கு பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நகராட்சி தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது.

÷நகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் தினசரி சந்தை,  குப்பைகள் நிறைந்த சந்தையாகக் காட்சியளிக்கிறது.

÷அங்குள்ள குப்பைகளை நகராட்சி சுகாதார ஊழியர்கள் நாள்தோறும் சென்று அள்ளுவது கிடையாது என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

÷கோவில்பட்டி நகராட்சிக்கு தினமும் சராசரியாக 2 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் வந்து செல்கின்றனர்.÷விவசாயிகள் தங்கள் விளை பொருள்களோடு சந்தைக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

÷வியாபாரிகள் தங்கள் கடைகளை சாலைகள் வரை ஆக்கிரமித்துள்ளதால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது.

÷இதனால் சந்தைக்குள் செல்லும் பொதுமக்களுக்கும், கடை வியாபாரிகளுக்கும் நாள்தோறும் தகராறு ஏற்படுகிறதாம்.

÷மேலும் கோவில்பட்டி தினசரி சந்தையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கைகளும் விடுக்கப்பட்டன. ÷ஆனால் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகளுக்கு காலக்கெடு அளித்துவிட்டு அப்படியே விட்டுவிடுகிறார்கள்.

÷இதனால் வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு நாளுக்குநாள் பெருகி வருகிறது. தினசரி சந்தை வளாகத்தில் தேங்கும் குப்பைகளை தினமும் அகற்றாமல் 2  நாளுக்கு ஒருமுறை அகற்றுகின்றனர். விடுமுறை நாள்களில் அகற்றுவதில்லை. ÷அண்மையில் பெய்த மழையால் குப்பைகள் சேறும், சகதியுமாகக் காணப்படுகிறது.

÷சந்தை வளாகத்தில் சுமார் 4 மாதங்களாக கழிப்பறை கட்டும் பணி நடந்து வருகிறது. தினசரி சந்தைக்குள் கழிப்பறையே இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அல்லல்படுகின்றனர்.

÷குறிப்பாக வியாபாரிகள் சந்தையிலேயே ஆங்காங்கே சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தூர்நாற்றமும் வீசுகிறது.÷வியாபாரிகளின் நலன் கருதி கோவில்பட்டி தினசரி சந்தையில் நடைபெற்று வரும் கழிப்பறை கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

÷நகராட்சி தினசரி சந்தை வளாகத்தில் குப்பைகள் குவிக்கப்படும் இடங்களிலுள்ள குப்பைகளை நாள்தோறும் முழுவதுமாக அள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ÷சந்தையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முறையாக வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அளித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

÷இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம், கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT