திருநெல்வேலி

ஆழ்வார்குறிச்சி கோயிலில் தைப்பூசத் தெப்பத் திருவிழா

தினமணி

அம்பாசமுத்திரம், பிப். 8: திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு அருள்மிகு சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயிலில் தைப்பூச தெப்ப உற்சவம் நடைபெற்றது.

 இத்திருவிழா ஜனவரி 29 ம் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. திங்கள்கிழமை இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி சிவசைலத்தில் இருந்து ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் விநாயகர் கோயிலுக்கு வந்தடைந்தனர்.

 செவ்வாய்க்கிழமை காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. பின்னர் சுவாமி, அம்பாள் கேடயத்தில் எழுந்தருளி தர்மபுர ஆதீன மடத்திற்கு வந்தடைந்தனர். அங்கு ருத்ர ஏகாதசி, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

 பின்னர் இரவு சுவாமி, அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வாணவேடிக்கை, சுவாமி,அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

 புதன்கிழமை தீபாராதனை, கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து சுவாமி - அம்பாள் எழுந்தருளி சிவசைலம் கோயிலுக்குச் சென்றனர். விழா ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டியினர், ஆழ்வார்குறிச்சி வியாபாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT