அட்சய திருதியை: நெல்லையப்பர் கோவிலில் நாளை சிறப்பு பூஜைகள்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் அட்சய திருதியை நாளில் (மே 13) சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிற
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் அட்சய திருதியை நாளில் (மே 13) சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
இது தொடர்பாக இத் திருக்கோவில் நிர்வாக அதிகாரி ந. யக்ஞநாராயணன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் குபேரலிங்கம் சன்னதி அமையப்பெற்ற 3 சிவாலயங்களில் நெல்லையப்பர் திருக்கோவிலும் ஒன்று. இந்தத் திருக்கோவிலில் அமைந்துள்ள குபேரலிங்கத்துக்கு வரும் 13-ம் தேதி திங்கள்கிழமை அட்சய திருதியை நாளையொட்டி காலை 7.30 மணிக்கு அபிஷேகமும், 8.45 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து சுவாமிக்கு ஐஸ்வர்யேஸ்வரர் அலங்காரமும் செய்யப்படவுள்ளது.
Advertisement
Advertisement
அட்சய திருதியை நாளில் குபேரனுக்கு ஐஸ்வர்யம் வழங்கிய ஐஸ்வர்யேஸ்வரரை பக்தர்கள் வழிபட்டு நன்மை பெற இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.