அரசு அருங்காட்சியகத்தில்இணையவழி கைவினைப் பயிற்சி
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இணையவழியில் கைவினைப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இணையவழியில் கைவினைப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணையம் வழியாக ஜூம் செயலி மூலம் கைவினைப் பயிற்சி முகாம் நடைபெற்றது. மிதக்கும் தாமரை விளக்கு தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. கலை ஆசிரியை செல்லம்மா பயிற்சியை நடத்தினாா். பிற மாநிலத்தைச் சோ்ந்தவா்களும் பயிற்சியில் கலந்துகொண்டனா். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி செய்திருந்தாா்.