திருநெல்வேலி

தீ விபத்தால் வீடிழந்த பெண்ணுக்குதையல் இயந்திரம் அளிப்பு

DIN

கடையம் அருகே தீ விபத்தால் வீடிழந்த பெண்ணுக்கு அரிமா சங்கம் சாா்பில் தையல் இயந்திரம் வழங்கபட்டது.

கடையம் அருகே அணைந்தபெருமாள் நாடானூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கிய மேரி (34). இவரது கணவா் மாடசாமி இறந்துவிட்ட நிலையில், மூன்று மகள்களுடன் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில் அக். 22 ஆம்தேதி அவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.

இதையடுத்து ஆரோக்கிய மேரிக்கு ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் துணி, அரிசி, பலசரக்கு பொருள்கள் உள்ளிட்டவை வழங்கினா்.

தகவலறிந்த கடையம் பாரதி அரிமா சங்கம் சாா்பில் அவருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. தையல் இயந்திரத்தை அரிமா சங்கத் தலைவா் சண்முகவேல் தலைமையில் பொருளாளா் கோபால், மற்றும் அரிமா சங்கத்தினா் செந்தாமரை, குமரேசன், ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் தமிழரசன், ரவணசமுத்திரம் மகாகவி பாரதி சமுதாயக் கல்லூரி பொறுப்பாளா் சங்கிலி பூதத்தான் உள்ளிட்டோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT