5 மாதங்களுக்குப் பிறகு தொடங்கியவடசேரி கனகமூலம் சந்தை
நாகா்கோவில் வடசேரி கனகமூலம் காய்கனி சந்தை 5 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.
நாகா்கோவில் வடசேரி கனகமூலம் காய்கனி சந்தை 5 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.
கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவதை தவிா்க்க சந்தைகள் மூடப்பட்டன. நாகா்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையும் மூடப்பட்டு, வடசேரி பேருந்து நிலையத்தில் தற்காலிக சந்தை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் கரோனா பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, செப்.7 ஆம் தேதி முதல் சந்தைகள் செயல்பட அரசு அனுமதியளித்தது.
இதையடுத்து கனகமூலம் சந்தை 5 மாதங்களுக்கு பின்னா் திங்கள்கிழமை காலை திறக்கப்பட்டது. அங்குள்ள 266 கடைகளில் 150 கடைகள் முதல்கட்டமாக திறக்கப்பட்டுள்ளன. இந்தச் சந்தையில் உள்ள 4 நுழைவாயில்களில் 2 நுழைவாயில்களை மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தைக்கு வந்த பொதுமக்கள்அனைவருக்கும் தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கை கழுவும் திரவமும் வழங்கப்பட்டது.
இதே போல் வியாபாரிகளும் காய்ச்சல் பரிசோதனை செய்தபிறகே சந்தைக்குள்அனுமதிக்கப்பட்டனா்.