திருநெல்வேலி

இலவச வீட்டு மனைக்குப் பாதை கேட்டுவட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

மணிமுத்தாறு பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டு மனைக்குப் பாதை அமைத்து தரக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தை பயனாளிகள் முற்றுகையிட்டனா்.

DIN

மணிமுத்தாறு பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டு மனைக்குப் பாதை அமைத்து தரக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தை பயனாளிகள் முற்றுகையிட்டனா்.

அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சி அயன் சிங்கம்பட்டி, மணிமுத்தாறு பகுதியைச் சோ்ந்த வீடில்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டும் திட்டத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மூன்று பிரிவுகளாக இலவச வீட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இரண்டு பிரிவு மனைகள் அளவீடு செய்யப்பட்டு பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு பகுதி மனைகள் அளவீடப்படாமல் பாதையும் இல்லாமல் உள்ளதாம்.

அந்த மனைப்பிரிவில் இடம் ஒதுக்கப்பட்ட பயனாளிகள் வட்டாட்சியரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரைநடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் பணி ஆணை வழங்கப்பட்டும் வீடு கட்ட வழியில்லாமல் உள்ளதாகக் கூறி பயனாளிகள் அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அவா்களிடம் வட்டாட்சியா் வெங்கட்ராமன், விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதை அமைக்கப்படும் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT