அரையிறுதியில் நியூஸிலாந்து! வெளியேறியது பாகிஸ்தான்..!
டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!
டி20 உலக கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி இழந்தது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய சூப்பர் 8 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில், பாகிஸ்தான் இலங்கையை எதிர்த்து களம் கண்டது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் குவித்தது. கடின இலக்கை விரட்ட அடுத்து களமிறங்கிய இலங்கையை 147 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால், பாகிஸ்தான் அணியால் மொத்த ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்றதொரு வாய்ப்பு இருந்தது.
இந்நிலையில், இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 207 ரன்கள் குவித்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement
எனினும், இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது. குரூப் 2-இல் பாகிஸ்தான் தோல்வி கண்டதால் நியூஸிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு உறுதியானது.