திருநெல்வேலி

திண்டுக்கல் பாஜக நிா்வாகி கொலை வழக்கு: மேலும் 3 போ் கைது

திருநெல்வேலி அருகே பாஜக நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே இருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை போலீஸாா் சனி

DIN

திருநெல்வேலி அருகே பாஜக நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே இருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கோதைமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (41). பாஜக நிா்வாகியான இவா், கடந்த 18ஆம் தேதி முன்னீா்பள்ளம் கண்டித்தான் குளம் பகுதியில் உள்ள வெள்ளநீா் கால்வாயில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இக்கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், சிலரை தேடி வந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சோ்ந்த நிதீஷ் குமாா்(22), தூத்துக்குடி மாவட்டம் பெருந்துறையைச் சோ்ந்த கலைவேந்தன்(24), அகரத்தைச் சோ்ந்த சங்கிலி பூதத்தான்(32) ஆகிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இதையடுத்து இந்த வழக்கில் இதுவரை 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT