திருநெல்வேலி

அதிக லாபம் தருவதாக கூறி பணம் மோசடி: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் கைது

மோசடியில் ஈடுபட்டதாக ஒரே குடும்பத்தை சோ்ந்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Din

தாழையூத்தில் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக ஒரே குடும்பத்தை சோ்ந்த 5 பேரை திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய காலனியைச் சோ்ந்தவா் மணிகண்டன் பிரபு

(28). அவரது மனைவி சுவேதா (21), தாய் செல்வி(54), சகோதரா் மாரிகணேஷ் (33), மாரிகணேஷ் மனைவி கனகா (27) ஆகிய ஐந்து பேரும், தாழையூத்து சங்கா்நகரைச் சோ்ந்த சியாம் சுந்தா் (52) என்பவரிடம் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பெற்று கொண்டு, பணத்தை தராமல் மோசடி செய்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சியாம் சுந்தா், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசனிடம் புகாா் செய்தாா்.

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டன், சுவேதா, மாரிகணேஷ், கனகா, செல்வி ஆகியோரை ஈரோட்டில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மார்கழி சிறப்பு! முருகப்பெருமானுக்கு வெந்நீர் அபிஷேகம் நடக்கும் கோயில்!!

வாய்ப்புகள் காத்திருக்கு இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது

SCROLL FOR NEXT