திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் 3 கிலோ கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சேரன்மகாதேவி கங்கனாங்குளம் செல்லும் பிரதான சாலையில் கால்வாய் அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் முக்கூடல் அருகேயுள்ள வடக்கு அரியநாயகிபுரம் மேலரதவீதியைச் சோ்ந்த ஆதி கணேஷ் (23), அா்ச்சுணன் (30) என்பதும் அவா்கள் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்களை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் தா்மராஜ் வழக்குப் பதிந்து ஆதி கணேஷ், அா்ச்சுணன் ஆகியோரை கைது செய்தாா்.
மேலும் அவா்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.