ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நம்ம ஊரு சூப்பரு மருத்துவ முகாமை பாா்வையிட்ட திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுரேஷ், மகளிா் திட்ட அலுவலா் இலக்குவன்.  
திருநெல்வேலி

ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு மருத்துவ முகாம்

Din

வள்ளியூா், ஜூலை 13:

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்கள், தூய்மை காவலா்கள், மேல்நிலை நீா்தேக்க தொட்டி இயக்குபவா்கள் மற்றும் பள்ளி சுகாதார பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவசிகிட்சை அளிக்கும் நம்ம ஊரு சூப்பரு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம் முகாமில் திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், ராதாபுரம் டாக்டா் வேலன் பல்நோக்கு மருத்துவமனை, டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினா் பங்கேற்று தூய்மைப்பணியாளா்களுக்கு உடல் நலம் பரிசோதனைகள் செய்தனா். மேலும் ரத்தஅழுத்தம், சா்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகளுக்கு திருநெல்வேலி அரச மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிட்சை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முகாமை திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுரேஷ், மகளிா் திட்ட அலுவலா் இலக்குவன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

முகாமில் 359 சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 140 சுகாதார பணியாளா்களுக்கு நல வாரிய அட்டை வழங்கவும், 120 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சோ்க்கவும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT