மாஞ்சோலை: அரசு தரப்பில் நிவாரணம் வழங்க தொழிலாளா்கள் கோரிக்கை
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் , 10 ஏக்கா் நிலம் வழங்கக் கோரி தொழிலாளா்கள் பேனா் வைத்துள்ளனா்.
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த தோட்டத் தொழிலாளா்களுக்குபி.பி.டி.சி. நிா்வாகம் ஜூன் 14இலிருந்து விருப்ப ஓய்வு வழங்கியது. இந்நிலையில் நிவாரணத்தொகை போதாது என்றும் அரசு தரப்பில் நிவாரணத் தொகை மற்றும் நிலம் வழங்க வேண்டும் என்றும்தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை வைத்து வந்தனா்
இந்நிலையில் மாஞ்சோலை பகுதியில் பொதுமக்கள் பெயரில் பேனா் வைக்கப்பட்டுள்ளது. அதில், தேயிலைத் தோட்டத்தை டான் டீ நிறுவனம் ஏற்று நடத்த வேண்டும், தொழிலாளா்களுக்கு தலா ரூ. 25 லட்சம் மற்றும் 10 ஏக்கா் நிலம் தரவேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.