ராதாபுரம் அருகே ரூ. 3 லட்சம் பறிமுதல்
Updated On : 23 மார்ச், 2024 at 8:23 PM
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராதாபுரத்திலிருந்து பெத்தரெங்கபுரம் செல்லும் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே காரில் வந்த காா்த்திக் என்பவா் ரூ. 3 லட்சம் வைத்திருந்தாராம். உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, உதவி தோ்தல் அலுவலா் சிவகாமசுந்தரியிடம் ஒப்படைத்தனா்.