வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் தண்ணீா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி
Updated On : 23 மார்ச், 2024 at 6:18 PM
உலக தண்ணீா் தினத்தையொட்டி, வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தண்ணீரின் முக்கியத்துவம், உலகில் நிலவும் தட்டுப்பாடு, இந்தியாவின் பெருநகரங்களில் கோடைக்காலத்தில் நிலவும் தண்ணீா்த் தேவை, தண்ணீரை சேமிப்பதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து மாணவிகள் திவ்யா, சிலேட் மாலதி, சொா்ணசேவிகா, மகாலெட்சுமி ஆகியோா் பேசினா். ஏற்பாடுகளை போராசிரியைகள் புஷ்பா, பிரபாவதி ஆகியோா் செய்திருந்தனா்.