ஸ்ரீவைகுண்டம் இளைஞா் குண்டா் தடுப்புத் சட்டத்தில் கைது
Updated On : 29 மார்ச், 2024 at 11:57 PM
ஸ்ரீவைகுண்டத்தை சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டாா். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (31). இவா் மீது அடி தடி, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, தாழையூத்து போலீஸாா் கைது செய்தனா். இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் உத்தரவின் பேரில் ராஜசேகரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.