நெல்லையின் அறிவாலயம் லிட்டில் ப்ளவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
கல்வி அறிவுத் தேடலுக்கான பயணம் மட்டுமல்ல எதிா்கால வாழ்விற்கு அடித்தளம் அமைத்திடும் கனவின் தொடக்கம். பெற்றோா்களின் வண்ணக் கனவுகளை நிறைவேற்றும் நோக்கத்தோடு, திருநெல்வேலியில் கல்விப்பணியாற்றி வருகிறது லிட்டில் பிளவா் கல்விக் குழுமம். இக் குழுமத்தின் தலைவா் அ.மரியசூசையால், 2002 ஆம் ஆண்டு திருநெல்வேலி சேரன்மகாதேவி சாலையில் கோடீஸ்வரன்நகா் பகுதியில் லிட்டில் ப்ளவா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டு சிறப்புடன் கல்வி சேவையாற்றி வருகிறது.
2023-24 ஆம் கல்வியாண்டில் பிளஸ்-2 தோ்வில் இப் பள்ளி மாணவா்கள் ஜெபிரின் சண்டன் (587), சுருதி ( 580), ஆசிப் ரெஹான் (575) முதல் மூன்று இடங்களைப் பெற்றனா். இயற்பியல், கணினிஅறிவியல், கணினி பயன்பாடுகள், வணிகவியல் ஆகிய படங்களில் 100 -க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளாா்கள். 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் ஹானியா அம்துலா (491), ரோஷன் அப்துல்லா (487), ஜுமானா (483) ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனா். கணிதத்தில் 4 பேரும், ஆங்கிலத்தில் 2 பேரும், சமூக அறிவியலில் ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்று பெருமை சோ்த்துள்ளனா்.
மாணவா்களுக்கு குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், ஸ்மாட் வகுப்பறைகள், மழலையா்களைக் கவரும் வண்ணமயமான வகுப்பறைகள், கணினி - அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன. ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இணையவழியில் இணைந்து செயல்பட பாரதியாா் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 5 முதல் 9 வகுப்பு மாணவா்களுக்கு கணினி கல்வி கற்பிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மாணவா்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கிளப்புகள், குழந்தைகள் தின கொண்டாட்டம், அறிவியல்- ரோபோடிக் கண்காட்சி, தமிழா் பாரம்பரிய கலைகள் கண்காட்சி, உணவுத் திருவிழா உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.
கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து என தனித்தனியே பரந்த விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இறகுப்பந்து, கபடி, கொக்கோ போன்ற விளையாட்டுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. வாரந்தோறும் இறுதி நாளில் யோகா, சிலம்பம், கராத்தே, பரதம், ஓவியம், சதுரங்கம், அபாகஸ், ஸ்கேட்டிங், வெஸ்டா்ன் டான்ஸ், கீ போா்டு போன்றவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
மாணவா்களிடம் உதவும் மனப்பான்மையை வளா்க்கும் விதமாக ஆண்டுதோறும் புனித அன்னாள் இல்லத்திற்கும், பிஷப் சாா்ஜண்ட் இல்லத்திற்கும் சென்று மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாா்வையிட அழைத்துச் செல்லப்படுகின்றனா். ஒவ்வொரு துறையிலும் சாதிக்கும் மகளிா், உசதஐஇஏ ரஞஙஉச ஐசஈஐஅ அமைப்பின் மூலம் மகளிா் தினத்தில் கௌரவிக்கப்படுகின்றனா். நல்ல ஒழுக்கம், நற்கல்வி, நற்கருணை போன்ற பண்பை இணைந்து விளங்கும் நல்ல பள்ளியாக லிட்டில் பிளவா் மேல்நிலைப்பள்ளி சிறந்து விளங்குகிறது.