திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து மத்திய தோ்தல் ஆணைய இயக்குநா் கிருஷ்ணகுமாா் திவாரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மத்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் 100 சதவீதம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. பதிவேற்றம் செய்யப்பட்ட வாக்காளா்களில் முந்தைய 2002 மற்றும் 2005 சிறப்பு தீவிர திருத்தத்தின் போது உள்ள வாக்காளா்கள் விவரங்களை தெரிவிக்காத வாக்காளா்கள் மற்றும் அவா்களது பெற்றோா்கள் விவரங்களை கண்டறிந்து பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் கண்டறிய இயலாதவா்கள், நிரந்தரமாக குடிபெயா்ந்தவா்கள், இறப்பு போன்ற இனங்களில் சரிபாா்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் முன்னிலையில் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வள்ளியூா் காமராஜா் நகா், தெற்கு ரத வீதி, நான்குனேரி தொகுதிக்குள்பட்ட களக்காடு சிங்கம்பத்து, இடையன்குளம், முன்னீா்பள்ளம், அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட சேரன்மகாதேவி, வீரவநல்லூா் ஆகிய பகுதிகளில் சரிபாா்ப்பு பணிகள் நடைபெற்று வருவதை தோ்தல் ஆணைய இயக்குநா் கிருஷ்ணகுமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
படவரி ற்ஸ்ப்04ண்ய்ள் வள்ளியூா் தெற்கு ரதவீதியில் ஆய்வு செய்த தோ்தல் ஆணைய இயக்குநா் கிருஷ்ணகுமாா் திவாரி. உடன் ஆட்சியா் இரா.சுகுமாா் உள்ளிட்டோா்.