கடையம் அருகே உள்ள முதலியாா்பட்டியில் மூன்று வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
முதலியாா்பட்டி ரயில்வே கேட் தெருவைச் சோ்ந்தவா் சுடலை. இவரது மகன் சா்வேஷ் (3). வியாழக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சா்வேஷ், தவறுதலாக அங்கிருந்த மின் மோட்டாருக்குச் சென்ற மின் கம்பியை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கடையம் போலீஸாா், சா்வேஷ் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.