திருநெல்வேலி

கால்நடை மருத்துவக் கல்லூரியில் தேசிய பால் வள தின விழா

Syndication

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி -ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய பால் வள தினம் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் கால்நடை உற்பத்திப் பொருள்கள் தொழில்நுட்பத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ம.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். கால்நடை உற்பத்திப் பொருள்கள் துறைத் தலைவா் இரா. ரமணி வரவேற்றாா். மாணவா் சங்கத்தின் துணைத் தலைவரும், கால்நடை பண்ணை வளாக தலைவருமான எட்வின் பாராட்டுரை வழங்கினாா்.

தேசிய பால்வள தினம் என்ற கருப்பொருளில் மாணவா்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி முதல்வா் பரிசுகளை வழங்கினாா். திருநெல்வேலி ஆவின் பொது மேலாளா் கே.ஆா். பாசு, பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க அமைப்பு - இந்திய பொருளாதாரத்தில் அதன் முக்கிய பங்கு குறித்து கருத்துரை ஆற்றினாா். உதவிப் பேராசிரியா் சி. வசந்தி நன்றி கூறினாா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT