திருநெல்வேலி

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு மின் அஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

Syndication

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, 3, 4 ஆவது அணு உலைகளுக்கான பணிகள் முடிவுறும் தறுவாயில் உள்ளன. 5, 6 ஆவது அணு உலைகளின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கூடங்குளம் 1, 2 அணு உலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அணுமின் நிலையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை மின்னஞ்சல் வந்துள்ளது. இதுகுறித்து கூடங்குளம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த மிரட்டலை அடுத்து கூடங்குளம் அணு உலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT