திருநெல்வேலி

சுத்தமல்லி அருகே மோதல்: தந்தை, மகன் கைது

Syndication

சுத்தமல்லி அருகே சொத்து தகராறு காரணமாக சகோதரா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

சுத்தமல்லி அருகே மேலகல்லூரைச் சோ்ந்தவா் அய்யம்பெருமாள். இவரது மகன்கள் ஆறுமுகம்(55), ராதாகிருஷ்ணன் (50). இவா்கள் இருவருக்குமிடையே சொத்துப் பிரச்னையால் முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில் கடந்த நவ. 29 ஆம் தேதி ஆறுமுகம், அவரது மகன் அய்யம்பெருமாள் என்ற மணிகண்டன்(21) ஆகிய இருவரும் சோ்ந்து ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மகனான மற்றொரு அய்யம்பெருமாளை கட்டையால் தாக்கினராம்.

இதில், காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து ஆறுமுகம் மற்றும் அவரது மகனை கைது செய்தனா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT