திருநெல்வேலி

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

Syndication

முன்னீா்பள்ளம் அருகே தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் அன்னை நகரைச் சோ்ந்தவா் சுடலை(39). தொழிலாளி. இவா், கடந்த மாதம் அப்பகுதியில் உள்ள சந்தையில் நின்றிருந்தபோது, கீழமுன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த சக்திவேல்(19) என்பவா் அவா் மீது மோதுவதுபோல் வந்தாராம். உடனே, அவரை கவனமாக செல்லுமாறு சுடலை கூறினாராம்.இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில் புதன்கிழமை காலை அப்பகுதியில் சுடலை தனது நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த சக்திவேல், அவரிடம் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து சக்திவேலை கைது செய்தனா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT