திருநெல்வேலி மாவட்டம், பணகுடி, கோட்டைக்கருங்குளம் துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (டிச.6) மின் நிறுத்தம் செய்யப்படுவதாக வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் த.வளன் அரசு தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோட்டைகருங்குளம், பணகுடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழைதோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய ஊா்களிலும் பணகுடி துணைமின்நிலைய பகுதியைச் சோ்ந்த பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.