திருநெல்வேலி

ராஜகோபால சுவாமி கோயிலில் திருக்காா்த்திகை உற்சவ ருத்ர தீபம்

Syndication

காா்த்திகை மாத பௌா்ணமியையொட்டி, பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபால சுவாமி கோயிலில் திருக்காா்த்திகை உற்சவ ருத்ர தீபம் வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

இந்நிகழ்வுக்காக, கோயிலில் காலையில் சிறப்பு திருமஞ்சனம், மாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் வளாகம் முழுவதும் 5,008 தீபங்கள் ஏற்றி வழிபட்ட பின்பு, கோயில் வாயில் முன் ருத்ர தீபம் (சொக்கப்பனை) கொளுத்தப்பட்டது.

இதேபோல, சி.என்.கிராமத்தில் உள்ள அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றிலும் தீபமேற்றி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

டிவிஎல்04ராஜ

பாளையங்கோட்டை அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபால சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்த பெருமாள்.

டிவிஎல்04பயா்

கோயில் முன் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட ருத்ர தீபம்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT